Skip to content
Home » Free Programme

Free Programme

இதுவரை நடந்தவை | இனி வரப்போகிறவை

Bukpet – writeroom நடத்தும் முதல் ஆன்லைன் எழுத்துப் பயிற்சி வகுப்புக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

  1. கதையோ கட்டுரையோ. எழுதுவது எதுவானாலும் அதன் முதல் சொல் – முதல் பத்தி – முதல் அத்தியாயம் சரியாகவும் துல்லியமாகவும் இருந்தால்தான் வாசிப்பவர்களின் ஆர்வத்தை ஈர்த்து, தக்க வைக்க முடியும். அப்படிச் சரியாக, துல்லியமாக முதல் சொல் – முதல் பத்தி – முதல் அத்தியாயத்தை அமைப்பது எப்படி என்று இந்தப் பயிலரங்கம் சொல்லித் தரும்.
  2. பா. ராகவன் இப்பயிலரங்கத்தை நடத்துகிறார்.
  3. இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசம். ஆனால் நூறு பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். முன் பதிவு அவசியம்.
  4. இந்தப் படிவத்தை நிரப்பி விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மின்னஞ்சலில் அழைப்பு மற்றும் இதர விவரங்கள் அனுப்பப்படும்.
  5. இளைஞர்கள், எழுத்துத் துறைக்குப் புதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஆகஸ்ட் 13, 2021; இந்திய நேரம் பகல் 12 மணி.