Home » Blog

Blog

உத்தி, புத்தி, சித்தி

எழுதத் தொடங்கிய காலத்தில் வாசனை திரவிய மொழிக்கு அடுத்தபடி என்னை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த இன்னொரு கெட்ட சக்தி, உத்திகள். பொதுவாக இறக்குமதிப் பொருள்களின் மீது நமக்கு மோகம் அதிகம். தேவை இருந்து பயன்படுத்துவது வேறு. அரிசிச் சோறெல்லாம் ஆகாது; தினசரி மூன்று வேளை ஜாங்கிரி பிழிந்துதான் சாப்பிடுவேன் என்பது அழிச்சாட்டியம் அல்லாமல் வேறல்ல. ஆனால் அது ஒரு போதை. எழுத்தைத் தவிர வேறெதுவும் எனக்கில்லை என்னும் மனநிலையில், படிப்பதும் எழுதுவதுமாக… Read More »உத்தி, புத்தி, சித்தி

இதழில் கதை எழுதும் நேரம் இது – ராஜேஷ் கர்கா

பத்தி 1 எல்லோருக்கும் கிரிக்கெட் விளையாடத் தெரியும். தெருவில் ஒரு கட்டையையும் ரப்பர் பந்தையும் வைத்துக் கொண்டு நாம் எல்லாருமே விளையாடி இருப்போம். பள்ளி அணியிலோ கல்லூரி அணியிலோ விளையாடிய அனுபவம் கூட சிலருக்கு இருக்கலாம். ஆனால் கிரிக்கெட் வீரராகப் பரிமளிக்க வேண்டும் என்றால் முறையாகக் கற்றுக் கொள்வது அவசியம். விளையாடும் முன் நம்மை எப்படித் தயார் செய்து கொள்ள வேண்டும், அணியில் நம் பங்கு என்ன, அதனைத் திறம்படச்… Read More »இதழில் கதை எழுதும் நேரம் இது – ராஜேஷ் கர்கா

டிசம்பர் வகுப்புகள்

  ட்   டிசம்பர் மாத வகுப்புகள் 5ம் தேதி இந்திய நேரம் மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும். இணைய விரும்புவோர், அளிக்கப்பட்டுள்ள வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வகுப்புகள் குறித்த முழுமையான விவரங்களை இந்தப் பக்கத்தில் பார்க்கலாம்.

அடிப்படைகளை அறிந்துகொள்வோம் – முத்து காளிமுத்து

எழுத்துப் பயிற்சி வகுப்பின் முதல் அணி மாணவர்களுள் ஒருவரான முத்து காளிமுத்து தமது அனுபவங்களை விவரிக்கிறார்:   ஆங்கிலத்தில் மாஸ்டர் கிளாஸ் மூலம் எழுதுதல் பற்றி கற்றுக் கொள்ளலாம் என்று இருந்தாலும், தமிழில் மூத்த எழுத்தாளர் பாரா சாரிடம் நேரிடையாக இணைய வகுப்புகளில் கற்று கொள்ளக் கிடைத்தது, மிகப் பெரிய வாய்ப்பு. தமிழில் இதற்கு முன்பு இப்படி ஒரு பயிற்சி வகுப்பு நிகழ்வு நடந்த மாதிரி நினைவில்லை எனக்கு. எழுத்துப்… Read More »அடிப்படைகளை அறிந்துகொள்வோம் – முத்து காளிமுத்து

கலையும் கணக்கும்

சரி, எழுதுவோம் என்று முடிவு செய்து ஆரம்பித்ததற்கும் முதல் பிரசுரத்துக்கும் நடுவே எனக்கு மூன்றாண்டுகள் இடைவெளி இருந்தது. சிலருக்கு இன்னும் குறைவாக இது இருக்கலாம். வேறு சிலருக்கு அதிகமாக. எழுத்தில் முதல் பிரசுரம் என்பது பஸ் வந்து நிற்கும்போது ஜன்னல் வழியாகத் துண்டு போட்டு இடம் பிடித்து வைப்பது போன்றது. அநேகமாக இடம் உறுதி. ஆனால் கூட்டத்தில் முண்டியடித்து ஏற வேண்டியது நம் பொறுப்பு. நமக்கு முன்னால் ஏறிவிட்டவர்கள், நாம்… Read More »கலையும் கணக்கும்

எழுத்தும் ஹெமிங்வேயும்

மின்னபொலீஸ் டிரிப்யூன் என்ற இதழின் செய்தியாளர் ஆர்நால்ட் சாமுவேல்சனுக்கு எர்னஸ்ட் ஹெமிங்வே அளித்த ஒரு நேர்காணலின் ஒரு பகுதி இது. எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடிய சில குறிப்புகள். இனி ஹெமிங்வே: எழுதுவதைப் பற்றி நான் முக்கியமாகத் தெரிந்துகொண்டது, ஒரே நேரத்தில் நிறைய எழுதக்கூடாது என்பதுதான். உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடக்கூடாது. எப்போதும் மறுநாளைக்குக் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்கவேண்டும். எழுத்தை எப்போது நிறுத்துவது என்று தெரிந்துவைத்திருப்பது மிகவும் முக்கியமானது. இருப்பதெல்லாம் எழுதித் தீரட்டும்… Read More »எழுத்தும் ஹெமிங்வேயும்

டிசம்பர் மாத வகுப்புகள்

வணக்கம். டிசம்பர் மாத எழுத்துப் பயிற்சி வகுப்புகள் 4.12.21 சனிக்கிழமை அன்று ஆரம்பமாகின்றன. ஒவ்வொரு வகுப்பிலும் 15 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். கதை / கதை அல்லாதவை / சமூக வலைத்தள எழுத்து / இதழியல் எழுத்து / நாவல் எழுதும் கலை / புத்தகக் கட்டமைப்பு நுட்பம் / எடிட்டிங் என ஏழு வகுப்புகள். மொத்தம் 30 மணி நேரம். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்திய நேரம்… Read More »டிசம்பர் மாத வகுப்புகள்

தினமும் இரண்டு

அன்பின் பாரா, தினமொரு குறிப்பு ஏன் தினமும் வருவதில்லை? கடந்த வாரம் சுமார் நூறு மின்னஞ்சல்களாவது இதனைக் கேட்டு வந்துவிட்டன. மிகக் கடுமையான வேலைப் பளு என்பது மட்டும்தான் காரணம். என்ன வேலை இருந்தாலும் இரவு படுக்கப் போகும் முன்னர் இதனை எழுதிவிட வேண்டும் என்றுதான் திட்டமிட்டேன். ஆனால் கை துவண்டு, கண் சொருகும் வரை வேறு ஏதோ ஒரு வேலை இழுத்துப் பிடித்துக்கொண்டுவிடுகிறது. எப்போதாவது இப்படி நேரும். இம்முறை… Read More »தினமும் இரண்டு

புதிய மாணவர் சேர்க்கை

அனைவருக்கும் விஜயதசமி தின வாழ்த்துகள்.   பா. ராகவன் நடத்தும் எழுத்துப் பயிற்சி வகுப்பின் இரண்டாவது அணியில் இணைவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மொத்தம் இருபது இடங்கள் உள்ளன. முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இரண்டாவது அணிக்கான எழுத்துப் பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 4 அன்று ஆரம்பமாகும். (முதல் அணி வகுப்புகள் நவம்பர் 20 அன்று முடிவடையும்.) Course விவரங்கள் #writeroom இணையத்தளத்தில் உள்ளன. பயிற்சிக் கட்டணம் செலுத்தும் விவரங்களை… Read More »புதிய மாணவர் சேர்க்கை