Skip to content
Home » Terms & Conditions

Terms & Conditions

  • bukpet.com-இன் ஒரு பிரிவான WriteRoom வகுப்பறை தளத்துக்கு (writeroom.bukpet.com) உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தமிழில் எழுத ஆர்வம் உள்ளவர்கள், தமது எழுத்தாற்றலை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்களுக்கான முறையான இணைய வழி பயிற்சி வகுப்புகளை நடத்தும் தளம் இது.
  • நீங்கள் இத்தளத்துக்கு வந்திருக்கிறீர்கள், இங்கே உலவுகிறீர்கள், உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி அளித்துப் பதிவு செய்கிறீர்கள் என்றால் நீங்கள் இந்த இணையத் தளத்தின் நிபந்தனைகள் மற்றும் சட்டதிட்டங்களை ஏற்கிறீர்கள் என்று பொருள். இந்த நிபந்தனைகளும் சட்ட திட்டங்களும் அவசியம் நேருமானால் மாற்றம் பெறலாம். இந்தப் பக்கத்தில் அதனை நீங்கள் எப்போதும் அறிந்துகொள்ள இயலும்.
  • WriteRoom எழுத்துப் பயிற்சி வகுப்புகள் இப்போது இணைய வழியாக நடத்தப்படும். பணம் செலுத்தி முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே வகுப்பில் கலந்துகொள்ள அனுமதி உண்டு.
  • நீங்கள் சேர விரும்பும் குறிப்பிட்ட வகுப்புக்கான தொகையைச் செலுத்தும் விதம் குறித்து உங்கள் விண்ணப்பம் வந்த பிறகு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். இது சற்று சுற்று வழி என்றாலும் இப்போதைக்கு இந்தத் தளம் இதனையே பின்பற்றுகிறது. இணைய வழி நேரடியாகப் பணம் செலுத்தும் முறைக்கு மாற்றம் பெறும்போது அந்த விவரம் இங்கே அறிவிக்கப்படும்.
  • நீங்கள் இந்தத் தளத்தைப் பார்வையிடும்போதோ, பயன்படுத்தும்போதோ உங்கள் மின்னஞ்சல் முகவரியை இத்தளத்தில் அளிக்கிறீர்கள். அல்லது வேறு காரணங்களுக்காக இத்தளத்தின் நிர்வாகிக்கு மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் என்றால் உங்கள் மின்னஞ்சல் முகவரி இத்தளத்தில் சேகரமாகிறது என்று பொருள். இத்தளம் அல்லது இதன் செயல்பாடுகள் சார்ந்த அறிவிப்புகள், புதிய பயிற்சி வகுப்புகள், கருத்துரையாடல் சம்பந்தப்பட்ட தகவல்கள், இதர தகவல் தொடர்புகளுக்கு இந்தத் தளம் உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்த நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். WriteRoom இணையத்தளம், எக்காரணம் கொண்டும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை வேறு யாருக்கும் வழங்காது.
  • பயிற்சி வகுப்புக்கான கட்டணங்கள், முன்னறிவிப்பின்றி மாற்றப்படலாம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, எழுத்துப் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பித்திருந்தீர்கள் என்றால், அதன் பிறகு நிகழும் கட்டண மாற்றம் எதுவும் உங்களுக்குப் பொருந்தாது. நீங்கள் ஏற்கெனவே செலுத்திய கட்டணத்திலேயே பயிற்சி வகுப்பை நிறைவு செய்யலாம்.
  • பயிற்சி வகுப்புக்காக செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற வழியில்லை என்பதை நீங்கள் இதன்மூலம் உணர்கிறீர்கள். பணம் செலுத்திய பின்பு வகுப்பில் கலந்துகொள்ள இயலாது போகுமானால், அதே குறிப்பிட்ட வகுப்பு, அடுத்த முறை நிகழும்போது நீங்கள் சேர்த்துக்கொள்ளப்படுவீர்கள்.
  • WriteRoom எழுத்துப் பயிற்சி வகுப்புகள் இப்போது Zoom, Google Meet, Zoho Meet, Microsoft Teams உள்ளிட்ட இணைய வழிக் கலந்துரையாடல் வசதி கொண்ட சாதனம் ஏதோ ஒன்றின் துணையுடன் நடத்தப்படும். இவ்வாறு இணைய வழி நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளைக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்துவோர், அவற்றை ஒளிப்படப் பதிவு செய்ய மாட்டேன் என்று ஒப்புதல் தருகிறீர்கள். writeroom நடத்தும் பயிற்சி வகுப்புகளின் ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு உரிமை bukpet.com-writeroom இணையத்தளத்துக்கு மட்டுமே உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.
  • இந்த இணையத்தளத்தில் உங்களுக்கு வரையறுக்கப்பட்ட உரிமைகள் மட்டுமே உள்ளன. நீங்கள் இந்த இணையத்தளத்தைப் பார்வையிடலாம், பதிவு செய்யலாம், தளம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு எழுதலாம். உங்கள் ஆலோசனைகளைச் சொல்லலாம். இது குறித்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்குத் தெரியப்படுத்தலாம், யுஆரெல்களைப் பகிரலாம். ஆனால் இத்தளத்தில் உள்ள எதையும் சட்ட விரோதமாகப் பதிவிறக்கம் செய்வதோ, வணிக ரீதியாக அவற்றை விற்பதோ தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
  • புத்தகம், எழுத்து சார்ந்த செயல்பாடுகளுக்காக இயங்கும் இணையத்தளமான bukpet-WriteRoom இல், இது தொடர்பாக வெளியிடப்படும் சுட்டிகளில் சில affiliate links ஆக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிகிறீர்கள், ஏற்கிறீர்கள். affiliate links ஐப் பின் தொடர்ந்து சென்று நீங்கள் எதையாவது வாங்கும்போது ஒரு சிறிய கமிஷன் தொகை இத்தளத்தை நிர்வகிப்போருக்குக் கிடைக்கும் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்று பொருள். இதனால் உங்களுக்கு எந்த விதக் கூடுதல் செலவும் இராது.
  • இந்த நிபந்தனைகளும் சட்டதிட்டங்களும் மாறுதலுக்குட்பட்டவை. முன்னறிவிப்பின்றி bukpet-writeroom இணையத்தள நிர்வாகிகள் அதனைச் செய்யும் உரிமை பெற்றவர்கள் என்பதை நீங்கள் ஏற்கிறீர்கள்.
  • bukpet-WriteRoom இணையத்தள நிர்வாகியை நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

Mrs. R. Ramya
admin@bukpet.com