Skip to content
Home » FAQ

FAQ

இந்தப் பயிற்சி வகுப்புக்குக் கட்டணம் எவ்வளவு?
எட்டு வெவ்வேறு வகுப்புகள் இப்போது தொடங்கப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து வித எழுத்துகளின் நுட்பங்களையும் கற்க நீங்கள் அனைத்து வகுப்புகளிலும் மொத்தமாகச் சேரலாம். மொத்தம் முப்பத்து நான்கு மணி நேர வகுப்புகள். இதற்கான கட்டணம் 30,000. தனித்தனி வகுப்புகளிலும் இணையலாம். கட்டண விவரம், இந்தப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது.

இலக்கியமெல்லாம் சொல்லிக் கொடுத்து எழுத வராது என்கிறார்களே?
இது இலக்கிய வகுப்பல்ல. பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், சமூக வெளி, ஓடிடி, புத்தகத் துறை, விளம்பரத் துறை எனப் பல்வேறு தளங்களில் எழுதத் தெரிந்தவர்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. முறையான எழுத்துப் பயிற்சியின் மூலம் சரியான வாய்ப்புகளைப் பெற முடியும். மக்கள் விரும்பும் வெற்றிகரமான எழுத்தாளராக நீங்கள் உருவாக இந்த வகுப்புகள் உதவும்.

இந்த வகுப்பில் சேருவதன் மூலம் எனக்கு என்ன கிடைக்கும்?
* எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது என்ற தெளிவு முக்கியமாகக் கிடைக்கும்
* எதை எப்படி எழுதினால் ரசிப்பார்கள் என்ற நுட்பம் பிடிபடும்
* சொற்களை இடத்துக்கு ஏற்ப எப்படிக் கையாள்வது என்று புரியும்
* கதைகள், கட்டுரைகள் எழுதப் பயிற்றுவிக்கப்படும்
* பெரிய விஷயங்களைச் சுருக்கமாக, எளிமையாகச் சொல்வது எப்படி என்று தெரிந்துகொள்வீர்கள்
* எழுத்துக்கு இன்றியமையாத துணைக்கருவியான எடிட்டிங்கின் நுட்பங்களை அறிவீர்கள்
* துண்டு துண்டாகப் பத்துக் கதைகள் அல்லது கட்டுரைகள் எழுதித் தொகுத்தால் அது புத்தகமாகிவிடாது. புத்தக உருவாக்கம் என்பது வேறு. அதன் அடிப்படைகள் முதல் பதிப்பிக்கும் முறைகள் வரை அனைத்தையும் கற்பீர்கள்
* சந்தைப்படுத்தல் குறித்த அடிப்படைகள் போதிக்கப்படும்

முப்பத்து நான்கு மணி நேர வகுப்பு என்பது எப்படி நடைபெறும்?
சனி-ஞாயிறுகளில் மட்டுமே வகுப்பு நடக்கும். ஒவ்வொரு வகுப்பும் இரண்டுமணி நேரம் நீடிக்கும். இதில் ஒன்றரை மணி நேரம் பாடமும் 30 நிமிடங்களுக்குக் கலந்துரையாடலும் இடம்பெறும்.  வகுப்பு குறித்த விவரங்கள், தொடங்கும் நாள், நேரம் போன்ற விவரங்கள் மாணவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

பணம் கட்டி வகுப்பில் சேர்ந்துவிட்ட பிறகு ஓரிரு வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் போனால் என்ன செய்வது?
எந்தக் குறிப்பிட்ட வகுப்புக்கு உங்களால் வர முடியவில்லையோ, அந்த வகுப்பு அடுத்த அணியினருக்கு (batch) நடக்கும்போது இணைந்துகொள்ளலாம்.

வகுப்பை ரெக்கார்ட் செய்யலாமா?
BukPet.com வகுப்புகளை முறையாக வீடியோ பதிவு செய்யும். தேவைப்படுவோர் கட்டணம் செலுத்தி அதனைப் பிறகு பெறலாம். இது பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும்.

இந்தப் பயிற்சி வகுப்பில் சேர்வதால் மட்டுமே நான் ஒரு எழுத்தாளனாகிவிட முடியுமா?
ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிக்கூடத்துக்குச் சென்று படித்துவிடுவதால் நீங்கள் உலக வங்கித் தலைவராகிவிட முடியுமா? அது போலத்தான் இது. உங்கள் இயல்பான எழுத்தார்வத்தை சரியான பாதையில் திருப்பிவிடுவதே இப் பயிற்சி வகுப்புகளின் நோக்கம். தொடர்ந்த, நீடித்த முயற்சிகளும் புதிய அணுகுமுறைகளுமே வெற்றிகரமான எழுத்தாளராக உங்களை நிலை நிறுத்தும். அதற்கான அடித்தளமும் வாய்ப்புகளும்  நிச்சயம் இந்த வகுப்பில் அமைத்துத் தரப்படும்.

பயிற்சியில் சேரப் பணம் செலுத்துவது எப்படி?
இந்தப் பக்கத்தில் அதற்கான வழி முறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பிற விவரங்களுக்கு class@bukpet.comக்கு எழுதுங்கள். உடனுக்குடன் பதில் வரும்.