Skip to content
Home » எதற்கு?

எதற்கு?

  • சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.
  • ஏராளமாகக் கதைகள், கட்டுரைகள் எழுதிப் பார்க்கிறேன். எதுவும் சரியாக இல்லாதது போலவே தோன்றுகிறது.
  • எனக்கு நன்றாக இருக்கிறது; ஆனால் படிப்பவர்கள் பாராட்டுவதில்லை.
  • பத்திரிகைகளுக்கு அனுப்பினால் பிரசுரமாவதில்லை.
  • ஃபேஸ்புக்கில் வெளியிட்டால் பத்து லைக் கூட வருவதில்லை.
  • எல்லோரும் விரும்பிப் படிக்கும்படி எப்படி எழுதுவது?

எழுதத் தொடங்கும் எல்லோருக்கும் இயல்பாக இருக்கும் கவலைகள் இவை. ஆனால் இவற்றில் இருந்து மிகச் சுலபமாக வெளியேறிவிட முடியும். வாசகர்களைக் கட்டிப்போடும் விதமாக எழுதுவது ஒரு நுட்பம். உங்களிடம் சொல்வதற்கு ஒரு சரியான விஷயம் இருந்துவிடுமானால், அதற்குப் பொருத்தமான வடிவம் தந்து, துல்லியமாக இலக்கை நோக்கி நகர்த்திவிட முடியும்.

அந்த நுட்பத்தைச் சொல்லித் தருவதே இந்த வகுப்புகளின் நோக்கம்.

கதை – கட்டுரை – உரையாடல் – புத்தக எழுத்து – சமூக வலைத்தள எழுத்து என்பதெல்லாம் ஒரு வசதிக்கு நாம் சொல்லிக்கொள்வதுதான். உண்மையில் எழுத்துக்கு அடிப்படை கருப்பொருள் மட்டுமே. சரியான பொருள் அமைந்துவிட்டால் சரியான வடிவத்தை அடைவது சுலபம்.

சரியானவற்றை அடைவதற்கு இந்த வகுப்புகள் வழி காட்டும்.

யாருக்கு?