Skip to content
Home » அசோகமித்திரன்

அசோகமித்திரன்

உத்தி, புத்தி, சித்தி

எழுதத் தொடங்கிய காலத்தில் வாசனை திரவிய மொழிக்கு அடுத்தபடி என்னை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த இன்னொரு கெட்ட சக்தி, உத்திகள். பொதுவாக இறக்குமதிப் பொருள்களின் மீது நமக்கு மோகம் அதிகம். தேவை இருந்து பயன்படுத்துவது வேறு. அரிசிச் சோறெல்லாம் ஆகாது; தினசரி மூன்று வேளை ஜாங்கிரி பிழிந்துதான் சாப்பிடுவேன் என்பது அழிச்சாட்டியம் அல்லாமல் வேறல்ல. ஆனால் அது ஒரு போதை. எழுத்தைத் தவிர வேறெதுவும் எனக்கில்லை என்னும் மனநிலையில், படிப்பதும் எழுதுவதுமாக… Read More »உத்தி, புத்தி, சித்தி

கலையும் கட்டங்களும்

அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலைப் படித்திருக்கிறீர்களா? அதை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை வரிசையாகப் படிக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. இஷ்டப்படி எந்த அத்தியாயத்தை வேண்டுமானாலும் முதலில் படிக்கலாம். அதற்குப் பிறகும் மாற்றி மாற்றிப் படிக்கலாம். கடைசியிலிருந்து படித்துக்கொண்டே வரலாம். நடுவிலிருந்து இரண்டு பக்கமும் மாறி மாறிப் பயணம் செய்யலாம். அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு தனிச் சிறுகதையாகக் கருதிவிட முடியும். கதையை அல்லாமல், களத்தை மையமாக வைத்த… Read More »கலையும் கட்டங்களும்

சிறிய விஷயங்களைப் பழகுதல்

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புது டெல்லியில் நடைபெற்ற ஓர் எழுத்து – எடிட்டிங் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்குச் சென்றிருந்தேன். டெல்லியே மிதக்கும் அளவுக்கு மழையும் வெள்ளமுமாக இருந்த ஒரு வாரத்தில், அறிவித்துவிட்ட காரணத்தால் மட்டுமே அந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள். இரண்டு நாள் வகுப்பு. ஆறு செஷன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்திரிகையாளர்களும் பதிப்பாசிரியர்களும் அந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டார்கள். மிக மூத்த எழுத்தாளர்கள் சிலரும் நாட்டின் தலைசிறந்த எடிட்டர்கள் ஓரிருவரும்… Read More »சிறிய விஷயங்களைப் பழகுதல்

ரகசியப் புத்தகம்

நிறையப் படிக்கிறோம். நிறையப் பேரைப் படிக்கிறோம். சிலரைப் பிடிக்கிறது. சிலவற்றைத் திரும்பத் திரும்பப் படிக்கிறோம். இதெல்லாம் எல்லோரும் செய்வது. ஆனால் எழுதும் விருப்பம் உள்ளவர்கள், நாம் ஏன் ஒரு புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கிறோம் என்று யோசிக்க வேண்டும். 1. அதன் கதை அல்லது கருப் பொருள் நமக்குப் பிடிக்கிறது 2. எழுதிய விதம் கவர்கிறது 3. நாம் எண்ணிப் பார்க்காத அர்த்தங்களை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் அப்படைப்பு தருகிறது… Read More »ரகசியப் புத்தகம்

கதையைத் தூக்கி வெளியே வை!

பல வருடங்களுக்கு முன்னர், சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒரு எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெயர் மறந்துவிட்டது. ஓர் அமெரிக்கப் பெண் எழுத்தாளரை அன்று சென்னை வாழ் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் சந்தித்தோம். அசோகமித்திரன் போன்ற மிகப்பெரிய எழுத்தாளர்களில் இருந்து என்னைப் போன்ற, அந்நாளைய எழுத்துச் சிறுவர்கள் வரை பல்வேறு தரத்திலான எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்தப் பெண்மணி சொற்பொழிவாற்றி முடித்த பிறகு கலந்துரையாடல் தொடங்கியது.… Read More »கதையைத் தூக்கி வெளியே வை!

முதல் பாடம்

bukpet வழங்கும் WriteRoom எழுத்துப் பயிற்சிக் கூடத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். எழுத்தார்வம் ஒன்றைத் தவிர வேறு திறமையோ, அறிவோ, படிப்போ, பின்புலமோ இல்லாமல் திரிந்துகொண்டிருந்தவன் நான். என் பெரியப்பாவின் சிபாரிசால் எனக்கு 1989ம் ஆண்டு அமுதசுரபி மாத இதழில் வேலை கிடைத்தது. 400 ரூபாய் சம்பளம். அங்கே தட்டுத் தடுமாறி எழுதப் பழகிக்கொண்டிருந்தபோது எழுத்தாளர் ம.வே. சிவகுமாரின் தொடர்பும் நட்பும் தாம்பரம்-கடற்கரை ரயில் பயணத்தின்போது தற்செயலாக வாய்த்தது. சிவகுமார்தான்… Read More »முதல் பாடம்