Skip to content
Home » Blog

Blog

எழுத்தில் எப்போது நகைச்சுவை வரும்?

நகைச்சுவையை எழுத்து வடிவத்துக்கு எது மாற்றும்? சுமார் இருபதாண்டுக் காலம் இது பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். நகைச்சுவை என்பது ஓர் உணர்வு. உங்கள் கட்டுப்பாட்டை உடைத்துப் புன்னகை செய்ய வைக்கும் ஒரு கலை. இதற்குச் சில கருவிகள் உள்ளன. 1. முக பாவனை (செந்தில்) 2. உடல் மொழி (நாகேஷ், வடிவேலு) 3. குரல் ஏற்ற இறக்கங்கள் (டி.எஸ். பாலையா, எம்.ஆர். ராதா) 4. வார்த்தை விளையாட்டுகள் (விவேக், சந்தானம்)… Read More »எழுத்தில் எப்போது நகைச்சுவை வரும்?

கட்டமைப்பு நுட்பம்

#writeRoom பயிற்சி வகுப்புப் பாடங்களில் Book Structuring என்றொரு பாடம் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். இந்தப் பயிற்சி வகுப்பு குறித்த முதல் அறிவிப்பினை வெளியிட்ட நாள் தொடங்கி இன்றுவரை தினமும் பத்துப் பேராவது அதைக் குறித்துக் கேட்கிறார்கள். Book Structuring என்றால் என்ன? வடிவமைப்பு, அச்சடித்தல், பைண்டிங், பேக்கிங் போன்றவை குறித்தா? ஒவ்வொருவருக்கும் ‘இல்லை’ என்று தனித்தனியே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதைப் பொதுவில் எழுதிவிடலாமே என்றுதான் இது. Structuring என்பதைத் தமிழில்… Read More »கட்டமைப்பு நுட்பம்

முதல் அணி மாணவர் சேர்ப்பு நிறைவடைந்தது

#writeRoom எழுத்துப் பயிற்சி வகுப்புகளின் முதல் அணிக்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்தது. இனி வகுப்பில் சேருவோர் டிசம்பர் முதல் சனிக்கிழமை அன்று ஆரம்பமாகும் இரண்டாவது அணியில் சேர்த்துக்கொள்ளப் படுவார்கள். முதல் அணியினருக்கான வகுப்புகள் அக்டோபர் 2ம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்கி நவம்பர் 20 அன்று நிறைவடையும். இது குறித்த அனைத்து விவரங்களும் வகுப்பில் இணைந்திருக்கும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சம் 15 மாணவர்கள் மட்டுமே… Read More »முதல் அணி மாணவர் சேர்ப்பு நிறைவடைந்தது

கலையும் கட்டங்களும்

அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலைப் படித்திருக்கிறீர்களா? அதை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை வரிசையாகப் படிக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. இஷ்டப்படி எந்த அத்தியாயத்தை வேண்டுமானாலும் முதலில் படிக்கலாம். அதற்குப் பிறகும் மாற்றி மாற்றிப் படிக்கலாம். கடைசியிலிருந்து படித்துக்கொண்டே வரலாம். நடுவிலிருந்து இரண்டு பக்கமும் மாறி மாறிப் பயணம் செய்யலாம். அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு தனிச் சிறுகதையாகக் கருதிவிட முடியும். கதையை அல்லாமல், களத்தை மையமாக வைத்த… Read More »கலையும் கட்டங்களும்

சிறிய விஷயங்களைப் பழகுதல்

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புது டெல்லியில் நடைபெற்ற ஓர் எழுத்து – எடிட்டிங் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்குச் சென்றிருந்தேன். டெல்லியே மிதக்கும் அளவுக்கு மழையும் வெள்ளமுமாக இருந்த ஒரு வாரத்தில், அறிவித்துவிட்ட காரணத்தால் மட்டுமே அந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள். இரண்டு நாள் வகுப்பு. ஆறு செஷன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்திரிகையாளர்களும் பதிப்பாசிரியர்களும் அந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டார்கள். மிக மூத்த எழுத்தாளர்கள் சிலரும் நாட்டின் தலைசிறந்த எடிட்டர்கள் ஓரிருவரும்… Read More »சிறிய விஷயங்களைப் பழகுதல்

Non-Fiction எழுத்துப் பயிற்சி வகுப்பு – அறிவிப்பு

பா. ராகவன் நடத்தும் non-fiction எழுத்துப் பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 9ம் தேதி சனிக்கிழமை தொடங்கும். அக்டோபர் 9,10, 17, 24 ஆகிய நான்கு தேதிகளில் (அடுத்தடுத்த இரண்டு சனி-ஞாயிறுகள்) இந்திய நேரம் மாலை 7 மணி முதல் 9 வரை நடக்கும். வகுப்பில் இணைய விரும்புவோர் கட்டணம் செலுத்தும் வழிமுறை அறிய class@bukpet.comக்கு எழுதவும். அல்லது +91 8610284208 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்யவும். கட்டண விவரங்கள் இங்கே… Read More »Non-Fiction எழுத்துப் பயிற்சி வகுப்பு – அறிவிப்பு

நம்பகமான கொலைகாரன்

அகிரா குரசோவாவின் வாழ்க்கை வரலாற்றில் அவரது குருவைப் பற்றி ஓரிடத்தில் சொல்வார் – ‘எடிட்டிங் அறையில் அவர் ஒரு நம்பகமான கொலையாளி.’ சினிமாவுக்கு மட்டுமல்ல. எழுத்திலும் நாம் நம்பகமான கொலையாளியாக இருந்தால்தான் எழுத்தாளராக நிலைத்திருக்க முடியும். எடிட்டிங் என்கிற நுட்பம் ஒரு பிரதியில் என்னென்ன மாயம் செய்யும் என்று இன்று பலருக்குத் தெரியாது. முதலில் எடிட்டிங் என்றால் என்னவென்றே சரியாகத் தெரிவதில்லை. 1. எடிட்டிங் என்றால் ப்ரூஃப் பார்ப்பது 2.… Read More »நம்பகமான கொலைகாரன்

ஆயுதம் பழகுதல்

நான் கடிதங்கள் அதிகம் எழுதியதில்லை. நினைவு தெரிந்து இரண்டு பேருக்குத்தான் ஆசை ஆசையாகக் கடிதம் எழுதியிருக்கிறேன். ஒருவர் தி.க. சிவசங்கரன். இன்னொருவர் லா.ச.ரா. எனக்கு அவர்கள் இருவரிடம் இருந்தும் வரும் பதில் கடிதங்கள் மிகுந்த உற்சாகத்தைத் தரும் என்பதாலேயே மாதம் ஒரு கடிதமாவது இருவருக்கும் எழுதிவிடுவேன். தி.க.சியைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். இந்தக் குறிப்பு லா.ச.ராவின் கடிதங்களைப் பற்றியது. ஒரு போஸ்ட் கார்டில் அதிகபட்சம் எவ்வளவு சொற்களை இட்டு… Read More »ஆயுதம் பழகுதல்

பொன் விதிகள் பத்து

கதை அல்லாத வேறு எதை நீங்கள் எழுதினாலும் அது நன்றாக இல்லாமல் போக வாய்ப்பே கிடையாது. non-fiction எழுத்து சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் விவரம் பொதிந்ததாகவும் இருக்கச் சில எளிய உத்திகள் உள்ளன. ஒரு கட்டுரையோ, புத்தகமோ, ஃபேஸ்புக் போஸ்டோ எழுதுகிறீர்கள். நாம் எழுதியது நன்றாக உள்ளதா இல்லையா என்று எப்படித் தெரிந்துகொள்வது? அடுத்தவர்கள் படித்துவிட்டுச் சொல்வது இருக்கட்டும். எழுதி முடித்த கணத்தில் நமக்கே அது தெரிந்துவிட வேண்டும். ஒரு பத்து… Read More »பொன் விதிகள் பத்து