Home » Blog

Blog

Non-Fiction எழுத்துப் பயிற்சி வகுப்பு – அறிவிப்பு

பா. ராகவன் நடத்தும் non-fiction எழுத்துப் பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 9ம் தேதி சனிக்கிழமை தொடங்கும். அக்டோபர் 9,10, 17, 24 ஆகிய நான்கு தேதிகளில் (அடுத்தடுத்த இரண்டு சனி-ஞாயிறுகள்) இந்திய நேரம் மாலை 7 மணி முதல் 9 வரை நடக்கும். வகுப்பில் இணைய விரும்புவோர் கட்டணம் செலுத்தும் வழிமுறை அறிய class@bukpet.comக்கு எழுதவும். அல்லது +91 8610284208 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்யவும். கட்டண விவரங்கள் இங்கே… Read More »Non-Fiction எழுத்துப் பயிற்சி வகுப்பு – அறிவிப்பு

நம்பகமான கொலைகாரன்

அகிரா குரசோவாவின் வாழ்க்கை வரலாற்றில் அவரது குருவைப் பற்றி ஓரிடத்தில் சொல்வார் – ‘எடிட்டிங் அறையில் அவர் ஒரு நம்பகமான கொலையாளி.’ சினிமாவுக்கு மட்டுமல்ல. எழுத்திலும் நாம் நம்பகமான கொலையாளியாக இருந்தால்தான் எழுத்தாளராக நிலைத்திருக்க முடியும். எடிட்டிங் என்கிற நுட்பம் ஒரு பிரதியில் என்னென்ன மாயம் செய்யும் என்று இன்று பலருக்குத் தெரியாது. முதலில் எடிட்டிங் என்றால் என்னவென்றே சரியாகத் தெரிவதில்லை. 1. எடிட்டிங் என்றால் ப்ரூஃப் பார்ப்பது 2.… Read More »நம்பகமான கொலைகாரன்

ஆயுதம் பழகுதல்

நான் கடிதங்கள் அதிகம் எழுதியதில்லை. நினைவு தெரிந்து இரண்டு பேருக்குத்தான் ஆசை ஆசையாகக் கடிதம் எழுதியிருக்கிறேன். ஒருவர் தி.க. சிவசங்கரன். இன்னொருவர் லா.ச.ரா. எனக்கு அவர்கள் இருவரிடம் இருந்தும் வரும் பதில் கடிதங்கள் மிகுந்த உற்சாகத்தைத் தரும் என்பதாலேயே மாதம் ஒரு கடிதமாவது இருவருக்கும் எழுதிவிடுவேன். தி.க.சியைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். இந்தக் குறிப்பு லா.ச.ராவின் கடிதங்களைப் பற்றியது. ஒரு போஸ்ட் கார்டில் அதிகபட்சம் எவ்வளவு சொற்களை இட்டு… Read More »ஆயுதம் பழகுதல்

பொன் விதிகள் பத்து

கதை அல்லாத வேறு எதை நீங்கள் எழுதினாலும் அது நன்றாக இல்லாமல் போக வாய்ப்பே கிடையாது. non-fiction எழுத்து சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் விவரம் பொதிந்ததாகவும் இருக்கச் சில எளிய உத்திகள் உள்ளன. ஒரு கட்டுரையோ, புத்தகமோ, ஃபேஸ்புக் போஸ்டோ எழுதுகிறீர்கள். நாம் எழுதியது நன்றாக உள்ளதா இல்லையா என்று எப்படித் தெரிந்துகொள்வது? அடுத்தவர்கள் படித்துவிட்டுச் சொல்வது இருக்கட்டும். எழுதி முடித்த கணத்தில் நமக்கே அது தெரிந்துவிட வேண்டும். ஒரு பத்து… Read More »பொன் விதிகள் பத்து

முதல் பயிற்சி வகுப்பு: இன்னும் மூவருக்கு மட்டுமே இடம்

எழுத்துப் பயிற்சி வகுப்புகளின் முதல் batch-இல் இன்னும் மூன்று பேருக்கு மட்டுமே இடம் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உடனே class@bukpet.comஐத் தொடர்புகொள்ளவும். அல்லது வாட்சப்பில் தொடர்பு கொள்ளலாம். அனைத்து வகுப்புகளிலும் இணைய விரும்புவோருக்கு முன்னுரிமை உண்டு. இப்போது பதிவு செய்வோருக்கு கட்டணச் சலுகை உள்ளது. விவரங்களை writeroom இணையத்தளத்தில் காணலாம். இரண்டாவது batch வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். முதல் அணியில் சேர முடியாதவர்கள் அதில் இணைந்துகொள்ளலாம். முன்பே அறிவித்திருந்தபடி… Read More »முதல் பயிற்சி வகுப்பு: இன்னும் மூவருக்கு மட்டுமே இடம்

சாதாரணங்களை அசாதாரணங்களாக்குவது எப்படி?

சாதாரணமான சில தகவல்களை மட்டும் சொல்லி, அசாதாரணமான உணர்வுகளையும் சிந்தனையையும் தூண்டுவது நல்ல எழுத்தின் இயல்புகளுள் ஒன்று. மூஞ்சியில் முள்ளைக் கட்டிக்கொண்டு எழுதினால்தான் பெரிய எழுத்தாளர் என்பதல்ல. மிகப் பெரிய சங்கதிகளைக் கூட எளிய நகைச்சுவை உணர்வுடன் விவரிக்கும்போது, சொல்ல வரும் செய்தியின் வீரியம் பன்மடங்கு அதிகரிக்கும். ஓர் உதாரணம் தருகிறேன். இது அ. முத்துலிங்கம் எழுதிய ‘கனடாவில் கிணறு’ என்ற கட்டுரையின் முதல் இரு பத்திகள். இதன் முதல்… Read More »சாதாரணங்களை அசாதாரணங்களாக்குவது எப்படி?

ஒன்றில் வாழ்தல்

  மேற்கண்ட குறிப்பினை ஃபேஸ்புக்கில் நண்பர் சரவண கார்த்திகேயன் எழுதியிருந்தார். ஆனால் இது ஒரு சாதனையோ, திறமையோ, பெருமையோ அல்ல. எளிய மனப் பயிற்சிகளின் மூலம் யாரும் செய்யக்கூடியதுதான். 2000ம் ஆண்டு நான் குமுதத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அப்போது ப்ரியா கல்யாணராமன் அங்கே எனக்கு அறிமுகமானார். எடிட்டோரியலில் அப்போது இருந்தவர்களிலேயே சீனியர் அவர்தான். அதாவது அவர் ஒரு குமுதம் ஆதிவாசி. எஸ்.ஏ.பி காலம் தொடங்கி, ராகி ரங்கராஜன், சுந்தரேசன், புனிதன் போன்றவர்களைக்… Read More »ஒன்றில் வாழ்தல்

ஒரு கடிதம், பல பாடங்கள்

குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்கள் இறந்தபோது ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன் மூவரும் தமது ஆசிரியரைப் பற்றிய நினைவுகளைத் தனித்தனியே எழுதினார்கள். பிறகு அது தொகுக்கப்பட்டு எடிட்டர் எஸ்.ஏ.பி என்ற தலைப்பில் வானதி பதிப்பகம் மூலமாகப் புத்தகமாக வெளி வந்தது. எவ்வளவு பேர் அந்தப் புத்தகத்தைப் படித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. அஞ்சலிக் கட்டுரை என்பது இன்றைக்கு ஒரு சடங்கு போலாகிவிட்ட சூழ்நிலையில், எழுத்து-பத்திரிகை இயல் சார்ந்த ஆர்வம்… Read More »ஒரு கடிதம், பல பாடங்கள்

ரகசியப் புத்தகம்

நிறையப் படிக்கிறோம். நிறையப் பேரைப் படிக்கிறோம். சிலரைப் பிடிக்கிறது. சிலவற்றைத் திரும்பத் திரும்பப் படிக்கிறோம். இதெல்லாம் எல்லோரும் செய்வது. ஆனால் எழுதும் விருப்பம் உள்ளவர்கள், நாம் ஏன் ஒரு புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கிறோம் என்று யோசிக்க வேண்டும். 1. அதன் கதை அல்லது கருப் பொருள் நமக்குப் பிடிக்கிறது 2. எழுதிய விதம் கவர்கிறது 3. நாம் எண்ணிப் பார்க்காத அர்த்தங்களை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் அப்படைப்பு தருகிறது… Read More »ரகசியப் புத்தகம்

வாயைத் திறந்து படி

யாரையும் வெறுப்படையச் செய்வதற்காக யாரும் எழுதுவதில்லை. ஆனால் சிலருடைய எழுத்தைப் படிக்கவே முடியவில்லை; எரிச்சல் வருகிறது; எடுத்தவுடன் வைத்துவிடத் தோன்றுகிறது என்ற விமரிசனங்களை அவ்வப்போது பார்க்கிறோம். நம்மிடம் எழுதுவதற்கு விஷயம் இருக்கும். நிறையவே இருக்கும். ஊக்கமுடன் அமர்ந்து எழுதுவோம். எழுதியதை கவனமாகப் படித்துப் பார்த்துத் திருத்தங்கள் செய்வோம். மெருகேற்றுவோம். எல்லா அலங்காரங்களையும் செய்து முடித்த பிறகுதான் வெளியிடுவோம். இருப்பினும் சில சமயம் சரியான வரவேற்பு இல்லாமல் போகும். உடனே வாசகன்… Read More »வாயைத் திறந்து படி