வணக்கம்.
நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் #writeRoom மாணவர்களான எதிர்கால எழுத்தாளர்களுக்கும் Bukpet-இன் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்தப் புத்தாண்டில் எழுத்து சார்ந்த உங்கள் திட்டங்கள் என்ன? Bukpet உடன் அதனைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Bukpet ஏராளமான புதிய திட்டங்களுடன் இந்த ஆண்டை எதிர்கொள்ள இருக்கிறது. அனைத்துமே உங்களைக் கவரும் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. இந்தப் புத்தாண்டு நன்னாளில் மகிழ்ச்சிக்குரிய முதல் அறிவிப்பினை வெளியிடுகின்றோம்.
#writeRoom எழுத்துப் பயிற்சித் திட்டத்தின் ஆசிரியர் பா. ராகவன் ‘எழுதுதல் பற்றிய குறிப்புகள்’ என்ற புத்தகத்தினை எழுதி நிறைவு செய்திருக்கிறார். இப்புத்தகம் எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் 7ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட இருக்கிறது. நூலில் பாராவே குறிப்பிட்டிருக்கும்படி, “எப்படி எழுதுவது என்று ஆர்வமுடன் கேட்பவர்களுக்கும், நீங்கள் எப்படி எழுதுகிறீர்கள் என்று அறிந்துகொள்வதற்காகக் கேட்பவர்களுக்கும்” இந்தப் புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும்.
தமது முப்பதாண்டுக் கால எழுத்து மற்றும் இதழியல் அனுபவங்களின் அடிப்படையில் பா. ராகவன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், எழுத்துத் துறைக்குப் புதிதாக வருபவர்களுக்கு நிச்சயமாக ஒரு பெரிய திறப்பைத் தரும்.
#writeRoom-இன் அனைத்து-முப்பது மணி நேரப் பயிற்சி வகுப்புகளிலும் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் இந்தப் புத்தகம் Bukpet-இன் அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படும். வெளிநாடு வாழ் மாணவர்கள் எனில், அவர்கள் குறிப்பிடும் இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இத்திட்டத்தில், முதல் இரண்டு வகுப்புகளில் இணைந்தோரும் சேருவர். நேரடிப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயில்வோருக்கு இந்தப் புத்தகம் உத்வேகம் தரும் ஒரு சிறந்த கையேடாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.
புத்தாண்டை புத்துணர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்வோம். அனைவருக்கும் மீண்டும் எமது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்.