Skip to content
Home » Blog » Bukpet மாணவர்களுக்குப் புத்தகப் பிரசுர வாய்ப்பு

Bukpet மாணவர்களுக்குப் புத்தகப் பிரசுர வாய்ப்பு

பாராவின் எழுத்துப் பயிற்சி வகுப்புக்கு வருகிற மாணவர்களுள் – ஒவ்வோர் அணியிலும் மிகச் சிறந்த / நம்பிக்கை நட்சத்திரமாகத் தென்படும் முதல் மூவருடன் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம் புத்தக ஒப்பந்தம் செய்யத் தயாராக இருக்கிறது.

எழுதக் கற்பது என்பது வேறு. புத்தக சாத்தியங்கள் வேறு. ஒரு சரியான பதிப்பாளரைக் கண்டடைவதில் இன்று வரை தமிழ் எழுத்தாளர்களுக்குப் பல பிரச்னைகள் இருக்கின்றன. அந்தத் தலைவலி எதுவும் இல்லாமல், முறையான ஒப்பந்தம், சரியான ராயல்டி, புத்தகப் பதிப்பு-பிரசுரம்-வினியோகம்-விற்பனை என ஒரு பெருங்கதவைத் திறந்து வைக்க ஜீரோ டிகிரி மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டுள்ளது.

Bukpet-க்கு அதன் அனைத்து மாணவர்களும் சமம்தான். இருப்பினும் இது ஒரு பெரிய வாய்ப்பு என்பதால் இம்மாதம் முதல் (நாளை மறுநாள் – பிப்ரவரி 12ம் தேதி) தொடங்கும் அணியினருக்கு வகுப்புகளின் இறுதியில் ஒரு சிறிய தேர்வு வைக்கப்படும். அதில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோர், ஜீரோ டிகிரியில் முதல் பிரசுர வாய்ப்பை அடைவார்கள்.

புதிய எழுத்தாளர்களுக்கு இப்படி ஒரு நல்வாய்ப்பை வழங்கியிருக்கும் ஜீரோ டிகிரிக்கு மனமார்ந்த நன்றி. எழுத்தார்வம் மிக்க இளைய தலைமுறையினரை Bukpet அன்புடன் வரவேற்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *