வணக்கம்.
பாராவின் இரண்டாவது அணி எழுத்துப் பயிற்சி வகுப்புகள் ஜனவரி 29 அன்று நிறைவடைகின்றன. பிப்ரவரி மாதத்துக்கான வகுப்புகள் 12ம் தேதி தொடங்கவிருக்கின்றன. இப்போது முதல் அதில் இணைவதற்குப் பதிவு செய்துகொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் கடைசி நிமிடத்தில் வகுப்பில் இணைவதற்குப் பலர் ஆர்வமுடன் வருகிறபோது சங்கடமுடன் மறுக்க வேண்டியதாகிறது. தவிர, அனைத்து வகுப்புகளிலும் இணைவோருக்கு முன்னுரிமை தரப்படும் என்பதால், ஓரிரு வகுப்புகளில் சேர விரும்புகிறவர்கள் காத்திருக்கும்படி ஆகிவிடுகிறது.
இப்பிரச்னைகள் இனி இல்லாதிருப்பதற்காகத்தான் இம்முறை ஒரு மாதம் முன்னதாகவே பதிவு செய்துகொள்ளும்படி ஏற்பாடு செய்திருக்கிறோம். ஒவ்வோர் அணியிலும் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இப்போது மாணவர் சேர்க்கை நடக்கிறது. அணிக்கு அதிகபட்சம் இருபத்தைந்து பேருக்கு மேல் சேர்க்கப்படுவதில்லை. எனவே, எழுத்தார்வம் உள்ள நண்பர்கள் பிப்ரவரி மாத வகுப்பில் சேர விரும்பினால் இப்போது முதல் பதிவு செய்துகொள்ளலாம்.
வகுப்பில் இணைய, +91 8610284208 என்ற வாட்சப் எண்ணில் நிர்வாகியைத் தொடர்புகொள்ளலாம்.