Skip to content
Home » Blog

Blog

கலையும் கணக்கும்

சரி, எழுதுவோம் என்று முடிவு செய்து ஆரம்பித்ததற்கும் முதல் பிரசுரத்துக்கும் நடுவே எனக்கு மூன்றாண்டுகள் இடைவெளி இருந்தது. சிலருக்கு இன்னும் குறைவாக இது இருக்கலாம். வேறு சிலருக்கு அதிகமாக. எழுத்தில் முதல் பிரசுரம் என்பது பஸ் வந்து நிற்கும்போது ஜன்னல் வழியாகத் துண்டு போட்டு இடம் பிடித்து வைப்பது போன்றது. அநேகமாக இடம் உறுதி. ஆனால் கூட்டத்தில் முண்டியடித்து ஏற வேண்டியது நம் பொறுப்பு. நமக்கு முன்னால் ஏறிவிட்டவர்கள், நாம்… Read More »கலையும் கணக்கும்

எழுத்தும் ஹெமிங்வேயும்

மின்னபொலீஸ் டிரிப்யூன் என்ற இதழின் செய்தியாளர் ஆர்நால்ட் சாமுவேல்சனுக்கு எர்னஸ்ட் ஹெமிங்வே அளித்த ஒரு நேர்காணலின் ஒரு பகுதி இது. எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடிய சில குறிப்புகள். இனி ஹெமிங்வே: எழுதுவதைப் பற்றி நான் முக்கியமாகத் தெரிந்துகொண்டது, ஒரே நேரத்தில் நிறைய எழுதக்கூடாது என்பதுதான். உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடக்கூடாது. எப்போதும் மறுநாளைக்குக் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்கவேண்டும். எழுத்தை எப்போது நிறுத்துவது என்று தெரிந்துவைத்திருப்பது மிகவும் முக்கியமானது. இருப்பதெல்லாம் எழுதித் தீரட்டும்… Read More »எழுத்தும் ஹெமிங்வேயும்

டிசம்பர் மாத வகுப்புகள்

வணக்கம். டிசம்பர் மாத எழுத்துப் பயிற்சி வகுப்புகள் 4.12.21 சனிக்கிழமை அன்று ஆரம்பமாகின்றன. ஒவ்வொரு வகுப்பிலும் 15 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். கதை / கதை அல்லாதவை / சமூக வலைத்தள எழுத்து / இதழியல் எழுத்து / நாவல் எழுதும் கலை / புத்தகக் கட்டமைப்பு நுட்பம் / எடிட்டிங் என ஏழு வகுப்புகள். மொத்தம் 30 மணி நேரம். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்திய நேரம்… Read More »டிசம்பர் மாத வகுப்புகள்

தினமும் இரண்டு

அன்பின் பாரா, தினமொரு குறிப்பு ஏன் தினமும் வருவதில்லை? கடந்த வாரம் சுமார் நூறு மின்னஞ்சல்களாவது இதனைக் கேட்டு வந்துவிட்டன. மிகக் கடுமையான வேலைப் பளு என்பது மட்டும்தான் காரணம். என்ன வேலை இருந்தாலும் இரவு படுக்கப் போகும் முன்னர் இதனை எழுதிவிட வேண்டும் என்றுதான் திட்டமிட்டேன். ஆனால் கை துவண்டு, கண் சொருகும் வரை வேறு ஏதோ ஒரு வேலை இழுத்துப் பிடித்துக்கொண்டுவிடுகிறது. எப்போதாவது இப்படி நேரும். இம்முறை… Read More »தினமும் இரண்டு

புதிய மாணவர் சேர்க்கை

அனைவருக்கும் விஜயதசமி தின வாழ்த்துகள்.   பா. ராகவன் நடத்தும் எழுத்துப் பயிற்சி வகுப்பின் இரண்டாவது அணியில் இணைவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மொத்தம் இருபது இடங்கள் உள்ளன. முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இரண்டாவது அணிக்கான எழுத்துப் பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 4 அன்று ஆரம்பமாகும். (முதல் அணி வகுப்புகள் நவம்பர் 20 அன்று முடிவடையும்.) Course விவரங்கள் #writeroom இணையத்தளத்தில் உள்ளன. பயிற்சிக் கட்டணம் செலுத்தும் விவரங்களை… Read More »புதிய மாணவர் சேர்க்கை

பாதி கிணறு

ஒரு நாவல் எழுத ஆரம்பித்தேன். முன்னூறு பக்கங்கள் தாண்டிவிட்டது. ஆனால் முடிக்க முடியவில்லை. ஒரு புத்தகம் எழுத ஆரம்பித்து பாதி எழுதிவிட்டேன். ஏனோ இழுத்துக்கொண்டே இருக்கிறது. முடிக்க வரமாட்டேனென்கிறது. கிடப்பில் போட்டதை மீண்டும் எடுத்து, தொடர வேண்டும். ஏனோ தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. பிரமாதமான ஒரு யோசனை இருக்கிறது. உட்கார்ந்து எழுதத்தான் வேளை அமைவதில்லை. அநேகமாக ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவர் என்னிடம் இவற்றில் ஒன்றைச் சொல்கிறார். அல்லது இம்மாதிரி… Read More »பாதி கிணறு

ஒரு கையேடு

நேற்று எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலரை எடுத்துச் சிறிது நேரம் புரட்டிக்கொண்டிருந்தேன். படித்துப் பல்லாண்டுகள் ஆகிவிட்டதால் சில விவரங்கள் மறந்திருந்தன. ஒரு கட்டுரையை முழுக்கப் படித்தேன். செய்ய இருந்த வேலையெல்லாம் மறந்து போய் அடுத்தடுத்து எட்ட கட்டுரைகளை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நிறுத்தவே மனம் வரவில்லை. உத்வேகம் தரக்கூடிய புத்தகங்களுக்கு என்று ஒரு பெரிய சந்தை உண்டு. 2003ம் ஆண்டு விகடன் வெளியிட்ட இந்த மலர் அப்படிச் சந்தையில்… Read More »ஒரு கையேடு

படிக்கக் கடுமையானவற்றைப் படிப்பது எப்படி?

எடுத்தேன்; ஆனால் படிக்க முடியவில்லை என்று பல பேர் பல புத்தகங்களைக் குறித்துச் சொல்லியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். படிக்க ஆரம்பித்துப் பாதியில் நிறுத்திவிட்டேன் என்று இன்றும் ஃபேஸ்புக்கில் நூற்றுக் கணக்கான ஸ்டேடஸ் வெளியாகின்றன. இந்த ‘படிக்க முடியவில்லை’ என்கிற அறிவிப்பு நிச்சயமாக ஒரு புத்தகத்தின் தரத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல் அல்ல. அது தனி நபர் கருத்து. அவ்வளவுதான். ஆகச் சிறந்த நவீன இலக்கியங்களுள் தலையாயதாகக் கருதப்படுகிற தஸ்தாயேவ்ஸ்கியின் ‘கரமஸாவ் சகோதரர்கள்’ நாவலைப்… Read More »படிக்கக் கடுமையானவற்றைப் படிப்பது எப்படி?

பயிற்சி வகுப்பு அனுபவங்கள் – விவேக் சிவகுமார்

Bukpet-writeRoom எழுத்துப் பயிற்சி வகுப்புகளின் முதல் அணி மாணவர்களுள் ஒருவர் விவேக் சிவகுமார். கதை எழுதப் பயின்ற  அனுபவங்களை அவர் இங்கே விவரிக்கிறார்: O எல்லோராலும் கதை எழுத முடியும். எல்லோராலும் சிறப்பாக எழுத முடியுமா? முடியும் என்ற நம்பிக்கையை பாராவின் Bukpet-writeRoom வகுப்பு தந்திருக்கிறது. எது கதை ஆகிறது, எப்பொழுது நல்ல கதை ஆகிறது, எப்படிக காலம் கடந்து நிற்கிறது, அதற்கான கட்டமைப்பு என்ன என்பதைச் சொல்லித் தர… Read More »பயிற்சி வகுப்பு அனுபவங்கள் – விவேக் சிவகுமார்