வணக்கம்.
டிசம்பர் மாத எழுத்துப் பயிற்சி வகுப்புகள் 4.12.21 சனிக்கிழமை அன்று ஆரம்பமாகின்றன. ஒவ்வொரு வகுப்பிலும் 15 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள்.
கதை / கதை அல்லாதவை / சமூக வலைத்தள எழுத்து / இதழியல் எழுத்து / நாவல் எழுதும் கலை / புத்தகக் கட்டமைப்பு நுட்பம் / எடிட்டிங் என ஏழு வகுப்புகள். மொத்தம் 30 மணி நேரம். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்திய நேரம் மாலை 7 மணி முதல் 9 மணி வரை வகுப்புகள் Zoom மூலமாக நடத்தப்படும்.
எழுத்தாளர் பா. ராகவன் இவ்வகுப்புகளை நடத்துகிறார். அடிப்படை எழுத்தார்வம் உள்ளவர்களுக்கு எளிமையாக, சுவாரசியமாக, ரசிக்கும்படி எழுதக் கற்றுத்தருவதே இவ்வகுப்புகளின் முக்கிய நோக்கம். தனது முப்பதாண்டுக் கால எழுத்து மற்றும் இதழியல் அனுபவங்களின் அடிப்படையில் பா. ராகவன் இவ்வகுப்புகளுக்கென்றே பிரத்தியேகமாகப் பாடத் திட்டங்களை வகுத்திருக்கிறார்.
பயிற்சிக் கட்டண விவரம் இங்கே உள்ளது. கட்டணம் செலுத்தும் வழிமுறை அறிய admin@bukpet.com மின்னஞ்சல் முகவரிக்கு Course Code-ஐக் குறிப்பிட்டு எழுதவும். அல்லது 8610284208 என்னும் எண்ணுக்கு வாட்சப் செய்யவும்.
அனைத்து வகுப்புகளிலும் இணைவோருக்கு சேர்க்கையில் முன்னுரிமை தரப்படும். இந்த எழுத்துப் பயிற்சி வகுப்புகள் பற்றிய முழுமையான விவரங்கள் #writeRoom இணையத்தளத்தில் உள்ளன.