Skip to content
Home » Blog » புனைவு எழுத்து வகுப்பு – அறிவிப்பு

புனைவு எழுத்து வகுப்பு – அறிவிப்பு

Bukpet-writeRoom வழங்கும் எழுத்துப் பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 2ம் தேதி இந்திய நேரம் மாலை 7 மணிக்குத் தொடங்குகின்றன.

முதலில் புனைவு எழுத்து வகுப்பு ஆரம்பமாகிறது. அக்டோபர் 2-3 (சனி, ஞாயிறு) இரு தினங்களிலும் மாலை 7 மணிக்கு இந்த வகுப்புகள் நடக்கும்.

சிறுகதை, குறுங்கதை, நெடுங்கதை, குறுநாவல், நாவல் என எந்த வடிவத்தில் நீங்கள் எழுத விரும்பினாலும் புனைவெழுத்தின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

எல்லாமே கதைதான், வாழ்க்கை முழுதும் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன என்பார்கள். இல்லை. வாழ்வெங்கும் சம்பவங்களே நிறைந்திருக்கின்றன.

  • அவற்றில் எது கதை ஆகும்?
  • எப்படி ஒரு சம்பவத்தைக் கதையாக உருமாற்றம் செய்வது?
  • ஒரு கதையை எங்கிருந்து, எப்படித் தொடங்குவது?
  • எங்கே வர்ணிக்க வேண்டும்?
  • எதையெல்லாம் விவரிக்க வேண்டும்?
  • எதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்? எதைப் புதைத்து வைக்க வேண்டும்?
  • ஒரு கதை, சாதாரண கதை ஆவதும், சிறந்த கதை ஆவதும் எப்படி நிகழ்கிறது?
  • கதையில் உள்ளடுக்குகளை எப்படி அமைப்பது?
  • உள்ளடுக்குகள் (layers) ஏன் அவசியம்?
  • காலத்தால் அழியாத கதைகளின் கட்டுமானம் என்ன?
  • ஒரு கதையின் வெற்றியில் மொழியின் பங்கு என்ன?
  • சுவாரசியமாகக் கதை சொல்வது எப்படி?
  • விறுவிறுப்பான எழுத்து என்பது எப்படிப் பிறக்கிறது?
  • ஸ்டைல் என்பது என்ன? அதைப் பெறுவது எப்படி?
  • உத்திகள் அவசியமா? எனில், எந்தளவு அவசியம்?
  • உத்திகளை எதிலெல்லாம் பயன்படுத்தலாம்?
  • போரடிக்கிறது என்ற சொல் வாசகரிடம் இருந்து ஏன் / எப்படி / எதனால் வருகிறது? அதை ஒழித்துக் கட்டுவது எப்படி?
  • இக்காலத் தலைமுறை எதை விரும்புகிறது? அதை எப்படி எழுத்தில் கொண்டு வருவது?

இவை இருக்கும். இன்னமும் இருக்கும்.

ஆர்வமுள்ளவர்கள் புனைவு எழுத்துப் பயிற்சி வகுப்புக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம். இப்போதைக்கு மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும். எனவே முதலில் பதிவு செய்வோருக்கே முன்னுரிமை தரப்படும்.

பயிற்சிக் கட்டணம் செலுத்தும் வழிமுறை அறிய class@bukpet.com க்கு எழுதவும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *