Skip to content
Home » Blog » வேகம்

வேகம்

ஒரு கதையோ, வேறெதையோ படிக்கிறீர்கள். அது உங்களுக்குப் பிடித்துப் போகிறது. உடனே, ‘வழுக்கிக்கொண்டு போகும் எழுத்து’ என்றோ, ‘விறுவிறுப்பான எழுத்து’ என்றோ, ‘எடுத்தால் வைக்க முடியவில்லை’ என்றோ சொல்கிறீர்கள்.

ஒரு படைப்பு எதனால் வேகம் பெறுகிறது என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா?

வேகம் என்ற அம்சம், படைப்பின் உள்ளடக்கம் அல்லது தரம் சார்ந்ததல்ல. அது ஒரு ப்ளகின் போன்றது. எழுதி முடித்த பிறகு தேவைக்கேற்ப வேகத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். தீவிர இலக்கியவாதிகள் தவிர பிற அனைத்து எழுத்தாளர்களும் இதனைச் செய்வார்கள்.

எழுத்தின் வேகம் என்பதை ஐந்து காரணிகள் தீர்மானிக்கின்றன.

1. எட்டு சொற்களுக்கு மிகாத சொற்றொடர்
2. மிகக் குறைந்த அளவு வல்லின மெய்யெழுத்துகளை மட்டுமே பயன்படுத்துவது
3. ஒவ்வொரு சொற்றொடரிலும் மிகவும் பொதுவான சொற்களுக்கு இடையே அதிகம் புழங்காத ஒரு சொல்லைச் சேர்ப்பது
4. ஒரு பத்தியில் நான்கு சொற்றொடர்களுக்கு மேல் இல்லாதிருப்பது
5. இயன்றவரை உரையாடல்களைப் பயன்படுத்துவது (இதிலும் முன் சொன்ன நான்கு அம்சங்களும் இடம்பெற வேண்டும்.)

எழுதி முடித்த பிறகு படித்துப் பார்ப்பது என்பது இதற்காகத்தான். ஒவ்வொரு வரியும் இந்த விதிகளுக்கு உட்பட்டிருக்குமானால் படிப்பவர்களுக்கு சிரமமே இராது.

இந்தக் குறிப்பை உள்வாங்கிக்கொண்டு, இதையே உங்கள் மொழியில் எழுதிப் பாருங்கள். இரண்டையும் படிப்பதற்கு ஆகும் நிமிடங்களை ஒப்பிடுங்கள். புரிந்துவிடும்.

7 thoughts on “வேகம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *