Skip to content
Home » Blog

Blog

முதல் பயிற்சி வகுப்பு: இன்னும் மூவருக்கு மட்டுமே இடம்

எழுத்துப் பயிற்சி வகுப்புகளின் முதல் batch-இல் இன்னும் மூன்று பேருக்கு மட்டுமே இடம் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உடனே class@bukpet.comஐத் தொடர்புகொள்ளவும். அல்லது வாட்சப்பில் தொடர்பு கொள்ளலாம். அனைத்து வகுப்புகளிலும் இணைய விரும்புவோருக்கு முன்னுரிமை உண்டு. இப்போது பதிவு செய்வோருக்கு கட்டணச் சலுகை உள்ளது. விவரங்களை writeroom இணையத்தளத்தில் காணலாம். இரண்டாவது batch வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். முதல் அணியில் சேர முடியாதவர்கள் அதில் இணைந்துகொள்ளலாம். முன்பே அறிவித்திருந்தபடி… Read More »முதல் பயிற்சி வகுப்பு: இன்னும் மூவருக்கு மட்டுமே இடம்

சாதாரணங்களை அசாதாரணங்களாக்குவது எப்படி?

சாதாரணமான சில தகவல்களை மட்டும் சொல்லி, அசாதாரணமான உணர்வுகளையும் சிந்தனையையும் தூண்டுவது நல்ல எழுத்தின் இயல்புகளுள் ஒன்று. மூஞ்சியில் முள்ளைக் கட்டிக்கொண்டு எழுதினால்தான் பெரிய எழுத்தாளர் என்பதல்ல. மிகப் பெரிய சங்கதிகளைக் கூட எளிய நகைச்சுவை உணர்வுடன் விவரிக்கும்போது, சொல்ல வரும் செய்தியின் வீரியம் பன்மடங்கு அதிகரிக்கும். ஓர் உதாரணம் தருகிறேன். இது அ. முத்துலிங்கம் எழுதிய ‘கனடாவில் கிணறு’ என்ற கட்டுரையின் முதல் இரு பத்திகள். இதன் முதல்… Read More »சாதாரணங்களை அசாதாரணங்களாக்குவது எப்படி?

ஒன்றில் வாழ்தல்

  மேற்கண்ட குறிப்பினை ஃபேஸ்புக்கில் நண்பர் சரவண கார்த்திகேயன் எழுதியிருந்தார். ஆனால் இது ஒரு சாதனையோ, திறமையோ, பெருமையோ அல்ல. எளிய மனப் பயிற்சிகளின் மூலம் யாரும் செய்யக்கூடியதுதான். 2000ம் ஆண்டு நான் குமுதத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அப்போது ப்ரியா கல்யாணராமன் அங்கே எனக்கு அறிமுகமானார். எடிட்டோரியலில் அப்போது இருந்தவர்களிலேயே சீனியர் அவர்தான். அதாவது அவர் ஒரு குமுதம் ஆதிவாசி. எஸ்.ஏ.பி காலம் தொடங்கி, ராகி ரங்கராஜன், சுந்தரேசன், புனிதன் போன்றவர்களைக்… Read More »ஒன்றில் வாழ்தல்

ஒரு கடிதம், பல பாடங்கள்

குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்கள் இறந்தபோது ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன் மூவரும் தமது ஆசிரியரைப் பற்றிய நினைவுகளைத் தனித்தனியே எழுதினார்கள். பிறகு அது தொகுக்கப்பட்டு எடிட்டர் எஸ்.ஏ.பி என்ற தலைப்பில் வானதி பதிப்பகம் மூலமாகப் புத்தகமாக வெளி வந்தது. எவ்வளவு பேர் அந்தப் புத்தகத்தைப் படித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. அஞ்சலிக் கட்டுரை என்பது இன்றைக்கு ஒரு சடங்கு போலாகிவிட்ட சூழ்நிலையில், எழுத்து-பத்திரிகை இயல் சார்ந்த ஆர்வம்… Read More »ஒரு கடிதம், பல பாடங்கள்

ரகசியப் புத்தகம்

நிறையப் படிக்கிறோம். நிறையப் பேரைப் படிக்கிறோம். சிலரைப் பிடிக்கிறது. சிலவற்றைத் திரும்பத் திரும்பப் படிக்கிறோம். இதெல்லாம் எல்லோரும் செய்வது. ஆனால் எழுதும் விருப்பம் உள்ளவர்கள், நாம் ஏன் ஒரு புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கிறோம் என்று யோசிக்க வேண்டும். 1. அதன் கதை அல்லது கருப் பொருள் நமக்குப் பிடிக்கிறது 2. எழுதிய விதம் கவர்கிறது 3. நாம் எண்ணிப் பார்க்காத அர்த்தங்களை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் அப்படைப்பு தருகிறது… Read More »ரகசியப் புத்தகம்

வாயைத் திறந்து படி

யாரையும் வெறுப்படையச் செய்வதற்காக யாரும் எழுதுவதில்லை. ஆனால் சிலருடைய எழுத்தைப் படிக்கவே முடியவில்லை; எரிச்சல் வருகிறது; எடுத்தவுடன் வைத்துவிடத் தோன்றுகிறது என்ற விமரிசனங்களை அவ்வப்போது பார்க்கிறோம். நம்மிடம் எழுதுவதற்கு விஷயம் இருக்கும். நிறையவே இருக்கும். ஊக்கமுடன் அமர்ந்து எழுதுவோம். எழுதியதை கவனமாகப் படித்துப் பார்த்துத் திருத்தங்கள் செய்வோம். மெருகேற்றுவோம். எல்லா அலங்காரங்களையும் செய்து முடித்த பிறகுதான் வெளியிடுவோம். இருப்பினும் சில சமயம் சரியான வரவேற்பு இல்லாமல் போகும். உடனே வாசகன்… Read More »வாயைத் திறந்து படி

சித்திரகுப்தன் பேரேடு

கல்கி ராஜேந்திரன், என்னுடைய ஆசிரியர்களுள் ஒருவர். அவரிடம் இருந்து நான் பயின்ற மிக முக்கியமானதொரு பாடம், எதையும் எழுதி வைப்பது. அவர் ஒரு சூட்கேஸ் வைத்திருப்பார். திறந்து பார்த்தால் அடுக்கடுக்காகக் குறிப்பு எழுதிய தாள்களே இருக்கும். (கல்கி அலுவலக நண்பர்கள் அதைச் சித்திரகுப்தன் பேரேடு என்பார்கள்.) பழைய கேலண்டர் தாள்களின் பின்புறம், நியூஸ் ப்ரிண்ட் வேஸ்ட் இவற்றைத்தான் அவர் குறிப்பெழுதப் பயன்படுத்துவார். அந்தக் குறிப்புத் தாள்களை மிகச் சரியாக 5X7… Read More »சித்திரகுப்தன் பேரேடு

வேகம்

ஒரு கதையோ, வேறெதையோ படிக்கிறீர்கள். அது உங்களுக்குப் பிடித்துப் போகிறது. உடனே, ‘வழுக்கிக்கொண்டு போகும் எழுத்து’ என்றோ, ‘விறுவிறுப்பான எழுத்து’ என்றோ, ‘எடுத்தால் வைக்க முடியவில்லை’ என்றோ சொல்கிறீர்கள். ஒரு படைப்பு எதனால் வேகம் பெறுகிறது என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? வேகம் என்ற அம்சம், படைப்பின் உள்ளடக்கம் அல்லது தரம் சார்ந்ததல்ல. அது ஒரு ப்ளகின் போன்றது. எழுதி முடித்த பிறகு தேவைக்கேற்ப வேகத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். தீவிர… Read More »வேகம்

கதையைத் தூக்கி வெளியே வை!

பல வருடங்களுக்கு முன்னர், சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒரு எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெயர் மறந்துவிட்டது. ஓர் அமெரிக்கப் பெண் எழுத்தாளரை அன்று சென்னை வாழ் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் சந்தித்தோம். அசோகமித்திரன் போன்ற மிகப்பெரிய எழுத்தாளர்களில் இருந்து என்னைப் போன்ற, அந்நாளைய எழுத்துச் சிறுவர்கள் வரை பல்வேறு தரத்திலான எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்தப் பெண்மணி சொற்பொழிவாற்றி முடித்த பிறகு கலந்துரையாடல் தொடங்கியது.… Read More »கதையைத் தூக்கி வெளியே வை!

புனைவு எழுத்து வகுப்பு – அறிவிப்பு

Bukpet-writeRoom வழங்கும் எழுத்துப் பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 2ம் தேதி இந்திய நேரம் மாலை 7 மணிக்குத் தொடங்குகின்றன. முதலில் புனைவு எழுத்து வகுப்பு ஆரம்பமாகிறது. அக்டோபர் 2-3 (சனி, ஞாயிறு) இரு தினங்களிலும் மாலை 7 மணிக்கு இந்த வகுப்புகள் நடக்கும். சிறுகதை, குறுங்கதை, நெடுங்கதை, குறுநாவல், நாவல் என எந்த வடிவத்தில் நீங்கள் எழுத விரும்பினாலும் புனைவெழுத்தின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். எல்லாமே கதைதான், வாழ்க்கை… Read More »புனைவு எழுத்து வகுப்பு – அறிவிப்பு