Skip to content
Home » எழுத்து

எழுத்து

பாதி கிணறு

ஒரு நாவல் எழுத ஆரம்பித்தேன். முன்னூறு பக்கங்கள் தாண்டிவிட்டது. ஆனால் முடிக்க முடியவில்லை. ஒரு புத்தகம் எழுத ஆரம்பித்து பாதி எழுதிவிட்டேன். ஏனோ இழுத்துக்கொண்டே இருக்கிறது. முடிக்க வரமாட்டேனென்கிறது. கிடப்பில் போட்டதை மீண்டும் எடுத்து, தொடர வேண்டும். ஏனோ தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. பிரமாதமான ஒரு யோசனை இருக்கிறது. உட்கார்ந்து எழுதத்தான் வேளை அமைவதில்லை. அநேகமாக ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவர் என்னிடம் இவற்றில் ஒன்றைச் சொல்கிறார். அல்லது இம்மாதிரி… Read More »பாதி கிணறு

கட்டமைப்பு நுட்பம்

#writeRoom பயிற்சி வகுப்புப் பாடங்களில் Book Structuring என்றொரு பாடம் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். இந்தப் பயிற்சி வகுப்பு குறித்த முதல் அறிவிப்பினை வெளியிட்ட நாள் தொடங்கி இன்றுவரை தினமும் பத்துப் பேராவது அதைக் குறித்துக் கேட்கிறார்கள். Book Structuring என்றால் என்ன? வடிவமைப்பு, அச்சடித்தல், பைண்டிங், பேக்கிங் போன்றவை குறித்தா? ஒவ்வொருவருக்கும் ‘இல்லை’ என்று தனித்தனியே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதைப் பொதுவில் எழுதிவிடலாமே என்றுதான் இது. Structuring என்பதைத் தமிழில்… Read More »கட்டமைப்பு நுட்பம்

சிறிய விஷயங்களைப் பழகுதல்

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புது டெல்லியில் நடைபெற்ற ஓர் எழுத்து – எடிட்டிங் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்குச் சென்றிருந்தேன். டெல்லியே மிதக்கும் அளவுக்கு மழையும் வெள்ளமுமாக இருந்த ஒரு வாரத்தில், அறிவித்துவிட்ட காரணத்தால் மட்டுமே அந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள். இரண்டு நாள் வகுப்பு. ஆறு செஷன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்திரிகையாளர்களும் பதிப்பாசிரியர்களும் அந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டார்கள். மிக மூத்த எழுத்தாளர்கள் சிலரும் நாட்டின் தலைசிறந்த எடிட்டர்கள் ஓரிருவரும்… Read More »சிறிய விஷயங்களைப் பழகுதல்

நம்பகமான கொலைகாரன்

அகிரா குரசோவாவின் வாழ்க்கை வரலாற்றில் அவரது குருவைப் பற்றி ஓரிடத்தில் சொல்வார் – ‘எடிட்டிங் அறையில் அவர் ஒரு நம்பகமான கொலையாளி.’ சினிமாவுக்கு மட்டுமல்ல. எழுத்திலும் நாம் நம்பகமான கொலையாளியாக இருந்தால்தான் எழுத்தாளராக நிலைத்திருக்க முடியும். எடிட்டிங் என்கிற நுட்பம் ஒரு பிரதியில் என்னென்ன மாயம் செய்யும் என்று இன்று பலருக்குத் தெரியாது. முதலில் எடிட்டிங் என்றால் என்னவென்றே சரியாகத் தெரிவதில்லை. 1. எடிட்டிங் என்றால் ப்ரூஃப் பார்ப்பது 2.… Read More »நம்பகமான கொலைகாரன்

ஆயுதம் பழகுதல்

நான் கடிதங்கள் அதிகம் எழுதியதில்லை. நினைவு தெரிந்து இரண்டு பேருக்குத்தான் ஆசை ஆசையாகக் கடிதம் எழுதியிருக்கிறேன். ஒருவர் தி.க. சிவசங்கரன். இன்னொருவர் லா.ச.ரா. எனக்கு அவர்கள் இருவரிடம் இருந்தும் வரும் பதில் கடிதங்கள் மிகுந்த உற்சாகத்தைத் தரும் என்பதாலேயே மாதம் ஒரு கடிதமாவது இருவருக்கும் எழுதிவிடுவேன். தி.க.சியைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். இந்தக் குறிப்பு லா.ச.ராவின் கடிதங்களைப் பற்றியது. ஒரு போஸ்ட் கார்டில் அதிகபட்சம் எவ்வளவு சொற்களை இட்டு… Read More »ஆயுதம் பழகுதல்

ரகசியப் புத்தகம்

நிறையப் படிக்கிறோம். நிறையப் பேரைப் படிக்கிறோம். சிலரைப் பிடிக்கிறது. சிலவற்றைத் திரும்பத் திரும்பப் படிக்கிறோம். இதெல்லாம் எல்லோரும் செய்வது. ஆனால் எழுதும் விருப்பம் உள்ளவர்கள், நாம் ஏன் ஒரு புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கிறோம் என்று யோசிக்க வேண்டும். 1. அதன் கதை அல்லது கருப் பொருள் நமக்குப் பிடிக்கிறது 2. எழுதிய விதம் கவர்கிறது 3. நாம் எண்ணிப் பார்க்காத அர்த்தங்களை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் அப்படைப்பு தருகிறது… Read More »ரகசியப் புத்தகம்

வேகம்

ஒரு கதையோ, வேறெதையோ படிக்கிறீர்கள். அது உங்களுக்குப் பிடித்துப் போகிறது. உடனே, ‘வழுக்கிக்கொண்டு போகும் எழுத்து’ என்றோ, ‘விறுவிறுப்பான எழுத்து’ என்றோ, ‘எடுத்தால் வைக்க முடியவில்லை’ என்றோ சொல்கிறீர்கள். ஒரு படைப்பு எதனால் வேகம் பெறுகிறது என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? வேகம் என்ற அம்சம், படைப்பின் உள்ளடக்கம் அல்லது தரம் சார்ந்ததல்ல. அது ஒரு ப்ளகின் போன்றது. எழுதி முடித்த பிறகு தேவைக்கேற்ப வேகத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். தீவிர… Read More »வேகம்

முதல் பாடம்

bukpet வழங்கும் WriteRoom எழுத்துப் பயிற்சிக் கூடத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். எழுத்தார்வம் ஒன்றைத் தவிர வேறு திறமையோ, அறிவோ, படிப்போ, பின்புலமோ இல்லாமல் திரிந்துகொண்டிருந்தவன் நான். என் பெரியப்பாவின் சிபாரிசால் எனக்கு 1989ம் ஆண்டு அமுதசுரபி மாத இதழில் வேலை கிடைத்தது. 400 ரூபாய் சம்பளம். அங்கே தட்டுத் தடுமாறி எழுதப் பழகிக்கொண்டிருந்தபோது எழுத்தாளர் ம.வே. சிவகுமாரின் தொடர்பும் நட்பும் தாம்பரம்-கடற்கரை ரயில் பயணத்தின்போது தற்செயலாக வாய்த்தது. சிவகுமார்தான்… Read More »முதல் பாடம்